மருதங்கேணி கொரோனா வைத்தியசாலையில் 21 பேர் அனுமதி!

Tuesday, October 20th, 2020

மருதங்கேணி கொரோனா மருத்துவமனையில் 21 கொரோனா நோயாளிகள் நேற்றிரவு அனுமதிக்கப்பட்டுள்ளனர் என மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா நோயாளிகள் தொடர்ச்சியாக அடையாளம் காணப்பட்டுவரும் நிலையில் வடக்கில் யாழ்ப்பாணம் மருதங்கேணியிலும், கிளிநொச்சி கிருஸ்ணபுரம் பகுதியிலும் கொரோனா மருத்துவமனைகள் சுகாதார அமைச்சினால் நிறுவப்பட்டுள்ளது.

இந்நிலையில் மருதங்கேணி மருத்துவமனை நேற்றய தினம் திறந்துவைக்கப்பட்ட நிலையில் நேற்று இரவு 10 மணிக்கு பின்னர் 21 நோயாளிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


வன்முறைச்சம்பவங்களுடன் தொடர்புடையவர் மீது சரமாரி வாள்வெட்டுத் தாக்குதல் - கல்வியங்காடு பகுதியில் சம்...
இலங்கையில் மீண்டுமொரு தாக்குதலை நடத்துவது இலகுவான காரியமல்ல - பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன!
யாழில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தடுப்பூசி பெற்றுள்ளனர் - வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தகவ...