மரண மற்றும் திருமண நிகழ்வுகளில் 15 பேருக்கு மட்டுமே அனுமதி – சுகாதார அமைச்சு அறிவிப்பு!

Thursday, May 13th, 2021

கொவிட் அல்லாத நிலையில் உயிரிழப்பவர்களின் உடல்களை  வைத்தியசாலையில் இருந்து ஒப்படைக்கப்பட்டு 24 மணித்தியாலத்திற்குள் அடக்கம் செய்யப்பட வேண்டும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், மரண நிகழ்வில் ஒரே தடவையில் ஆகக்கூடியது 15 பேர் மாத்திரமே பங்குப்பற்ற முடியும் என சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, திருமண வைபவம், விருந்துபசாரங்களை ஏற்பாடு செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், பதிவு திருமணத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனினும், குறித்த நிகழ்வில் ஆகக்கூடியத 15 பேர் மாத்திரமே பங்குபற்ற முடியும் எனவும் சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

Related posts: