மரக்கறிகளின் விலைகள் வீழ்ச்சி!

Monday, April 8th, 2019

யாழ்ப்பாணத்தில் இருந்து தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு அதிகளவிலான மரக்கறி வகைகள் கிடைப்பதனால், மரக்கறிகளின் விலைகள் 60 வீதத்தினால் குறைவடைந்துள்ளதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, கறிமிளகாய் கிலோ ஒன்றின் விலை 60 முதல் 65 ரூபா வரையிலும், கத்தரிக்காய் கிலோ ஒன்றின் விலை 30 முதல் 35 ரூபா வரையும் விற்பனை செய்யப்படுகிறது.

அத்துடன், பூசனிக்காய் கிலோ ஒன்றின் விலை 10 முதல் 12 ரூபாய் வரையும், பீட்ரூட் கிலோ ஒன்றின் விலை 20 முதல் 25 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன.


கிளிநொச்சியில் 19 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் - வட மாகாண ஆளுநர்.
அமைச்சர் மஹிந்த அமரவீரவிற்கு இந்திய அழைப்பு!
அடுத்த மாதம் இலங்கை  - இந்திய மீனவர் பிரச்சினை தொடர்லில் பேச்சுவார்த்தை!
இலங்கை இளைஞர்களின் திறனை அபிவிருத்தி செய்ய அமெரிக்கா உதவி!
அமைச்சர் ராஜிதவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி ஜனாதிபதியிடம் முறையீடு!