மனித உரிமைகள் தொடர்பில் கருத்துரைப்பவர்கள் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நன்மைகள் தொடர்பில் கருத்துரைப்பதில்லை – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவிப்பு!

Friday, March 19th, 2021

மக்களின் பிரச்சினைகளை பார்த்து அரசாங்கம் அமைதியாக செயற்படாது என தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச மனித உரிமைகள் தொடர்பில் கருத்துரைப்பவர்கள் நெல் கொள்வனவு அதிகரிப்பினால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நன்மைகள் குறித்து கருத்துரைப்பதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில் –

வாழ்க்கை செலவினங்ளை கட்டுப்படுத்துவதற்கு உற்பத்தி மற்றும் வருமானத்தை அதிகரிக்க வேண்டும்.

அதேநேரம் இறக்குமதி செய்யப்படுகின்ற பொருட்களின் விலைகள் உலக சந்தையின் சக்திகளால் தீர்மானிக்கப்படுகின்றன. வரிகளை குறைப்பதன் ஊடாக அவற்றின் விலைகளை கட்டுப்படுத்த முடியும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

மேலும் நாட்டில் பயிரிடக்கூடிய 17 பயிர்கள் அடையாளம் காணப்பட்டமையை அடுத்து இறக்குமதி தடைகள் விதிக்கப்பட்டன. இதனூடாக குறித்த பயிர்கள் உள்நாட்டிலேயே பயிரிடப்பட்டுள்ளன என தெரிவித்த ஜனாதிபதி ஒரு கிலோகிராம் நெல்லுக்கான கொடுப்பனவு 32 ரூபாயிலிருந்து 50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நெல்லுக்கான கொடுப்பனவின் நன்மைகள் ஒரு பகுதியிலுள்ள மக்களுக்கு மாத்திரமின்றி முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணத்தில் உள்ள மக்களுக்கும் கிடைத்துள்ளன என்றும் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதேவேளை காடழிப்பு செயற்பாடுகளுக்கு அரசாங்கம் ஒருபோதும் ஆதரவளிக்காது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாக அவரது ஊடகப்பிரிவு தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: