மதுபோதை சாரத்தியம்: 1763 சாரதிகள் கைது!

Wednesday, July 10th, 2019

கடந்த 24 மணித்தியாலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 263 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

நேற்று காலை 06 மணி முதல் இன்று காலை 06 மணி வரையில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

மதுபோதையுடன் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்காக விஷேட நடவடிக்கை கடந்த 05ம் திகதி ஆரம்பமாகி இன்று வரை 1763 வாகன சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

Related posts: