மண்ணெண்ணெய் விலை இன்று நள்ளிரவுமுதல் குறைக்கப்படும் !
Tuesday, June 12th, 2018
இன்று நள்ளிரவு முதல் மண்ணெண்ணெய் விலை குறைக்கப்படும் என்று கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் திலீப் வெதஆரச்சி தெரிவித்துள்ளார்.
இதற்கிணங்க மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலையை 70 ரூபாயாக குறைப்பதற்கு அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதனிடையே உலக சந்தையில் எண்ணெய் விலை அதிகரித்ததாலும், பஸ், லொறிகளுக்கு மண்ணெண்ணெய்யை பயன்படுத்தியதாலும் அதன் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எனினும், குறைந்த வருமானம் உடைய மக்களையும், கடற்றொழிலாளர்களையும் கருத்திற்கொண்டு, விலைக் குறைப்பை மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
Related posts:
25 சதவித பெண் பிரதிநிதித்துவத்தையடுத்து குழப்பம்!
மிளகு அறுவடைக்கு விலையை உறுதி செய்வது அவசியம் – ஜனாதிபதி தெரிவிப்பு!
நேரத்தைக் கழிப்பதற்காகவே காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டம் - பொராட்டத்தில் தகுதியான காரணம் எதுவுமில்லை...
|
|
|


