மண்டைக்கல்லாற்றில் கோர  விபத்து: 24 பேர் படுகாயம்!

Monday, August 22nd, 2016

மடுவில் இருந்து முழங்காவில் ஊடாக யாழ்ப்பாணம் சென்ற பேருந்து ஒன்று பூநகரி மண்டைக்கல்லாறு நாளாவெளி பகுதியில் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று(22) மதியம் ஏற்பட்ட குறித்த விபத்து பேருந்து கட்டுப்பாட்டை இழந்த தெரிவிக்கப்படுகின்றது. மேலும், குறித்த பேருந்தில் பயணித்தவர்கள் மடு திருத்தலத்தில் தரிசனத்தை முடித்து விட்டு இன்று அதிகாலை யாழ் நோக்கி சென்றவர்கள் எனவும் தெரிய வந்துள்ளது.

காயமடைந்தவர்கள் பூநகரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: