மக்களின் பணத்தை சூறையாடும் கூட்டமைப்பின் கம்மரெலிய தரகர் தர்சானந்த் – அதிர்ச்சியில் யாழ் மாநகர மக்கள்!

Saturday, May 25th, 2019

கம்பரெலிய திட்ட ஆரம்ப நிகழ்வுகளுக்கு எனக் கூறி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரண்டாம் நிலை இடைத்தரகர்களாகச் செயற்படும் பிரதேச சபை மற்றும் மாநகரசபை உறுப்பினர்கள் மக்களிடம் பணம் அறவிடும் சம்பவமொன்று அம்பலமாகியுள்ளது.

அரசாங்கத்தினால் கம்பரெலிய திட்டம் முன்னெடுக்கப்படும் நிலையில் அதன் இடைத்தரகர்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் செயற்பட்டுவருகின்றமை தெரிந்ததே.

இந்நிலையில் யாழ்ப்பாணம் மாநகரசபை எல்லைக்குள் கம்பரெலியயவைக் காவிக்கொண்டு திரிவதில் முன்னிற்பவரனா யாழ் மாநகரசபை 2 ஆம் வட்டார உறுப்பினரான தர்சானந்த் உள்ளிட்ட சிலர் தமது பிரதேசங்களில் கம்பரெலிய ஆரம்ப வைபவவங்களுக்கு எனக் கூறி ஒவ்வெரு குடும்பத்திடமும் தாலா 2 ஆயிரம் ரூபா 40 ஆயிரம் ரூபா பணம் அறவிட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் அவர்களின் திருட்டு அம்பலமாகிய நிலையில் அப் பணத்தினை திருப்பிச் செலுத்தும் வகையில் முற்பணமாகவே பெற்றோம் எனக் கூறி உடனடியாகவே அப் பணத்தினை மீளச் செலுத்தியிருந்தனர்.

இந்நிலையில் ஐந்தாம் வட்டாரத்திலும் இவ்வாறு பணம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளிக் கசிந்துள்ளன.

இது தொடர்பில் குழப்பமடைந்த தர்சானந்த நாங்கள் 40, 50 இலட்சம் உங்களுக்காக செலவளிக்கிறோம் எங்களுக்கு ஒரு நாற்பதாயிரம் தருவதில் உங்களுக்கு என்ன பிரச்சனை என பொதுமக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே அரசாங்க ஊழியர்கள் பொருளையோ, பரிசு பொருட்களையோ அல்லது ஏனைய இலாப பயன்களையோ நேரடியாகவோ அல்லது மூன்றாம் நபர் மூலமோ கையேற்பது இலஞ்ச ஊழல் சட்டத்தின் கீழும் அரச தாபனக் கோவை ஏற்பாடுகளுக்கு அமையவும் குற்றமாகுமென பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கமைய மேற்கண்டவாறு பொருட்களை அல்லது ஏனைய இலாப பயன்பளை பெற்றமை நிரூபிக்கப்பட்டால் இலஞ்ச ஊழல் சட்டத்திற்கமைய ஏழு வருட சிறை மற்றும் ஐயாயிரம் ரூபா வரையான தண்ட பணம் நீதிமன்றால் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: