போக்குவரத்துச் சேவையை இலகுபடுத்திய டக்ளஸ் தேவானந்தாவுக்கு நயினை பக்தர்கள் நன்றி தெரிவிப்பு!

Wednesday, June 15th, 2016

நயினாதீவுக்கான போக்குவரத்து சேவைகளை இலகுவாக்குவதில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கடந்தகாலங்களில் மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டதாலேயே நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு தாம் சிரமமின்றி சென்றுவரக்கூடியதாகவுள்ளதாக பக்தர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இம்மாதம் 6ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாக நடைபெற்றுவரும் நிலையில் நாள்தோறும் பெருமளவிலான பக்தர்கள் ஆலயத்திற்கு சென்றுவருகின்றனர்.

குறிகட்டுவானிலிருந்து நாகபூசணி அம்மன் துறைவரை பாதை படகுச் சேவையை டக்ளஸ் தேவானந்தாவின் ஏற்பாட்டின் அடிப்படையிலேயே ஆலயத்திற்கு இலகுவாக சென்றுவரக்கூடியதாக உள்ளதாக பக்தர்கள் நெஞ்சார்ந்த நன்றியுணர்வுடன் எமது பிரதேச செய்தியாளரிடம் தெரிவித்துள்ளனர்.

எதிர்வரும் 19 ஆம் திகதி இரதோற்சவமும் 20ஆம் திகதி தீர்த்தோற்சவமும்  மறுதினம் தெப்பத்திருவிழாவும் நடைபெறவுள்ள நிலையில் ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் எவ்வித இடையூறுகளுமின்றி தமது பயணங்களை மேற்கொண்டு வருவதாகவும் எமது செய்தியாளர் கூட்டிக்காடியுள்ளார்.

இதே போன்றுதான் ஏனைய தீவுப்பகுதிகளுக்கான கடல் போக்குவரத்து ஒழுங்குகளையும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டு கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Nainativu_Gopuram

08

03

Related posts:

புதிய வைரஸ் திரிபு தொடர்பான பரிசோதனை அறிக்கை இன்னும் இரண்டு வாரங்களில் வெளியிடப்படும் - ஸ்ரீ ஜயவர்தன...
நீண்ட காலமாக, நாடு தாங்க முடியாத பட்ஜெட் இடைவெளி இருப்பதால், பெரும் அழுத்தத்தைக் கொண்டுவரும் கடன் வல...
மலையக மக்களின் வரலாறு 200 ஆண்டுகளை நிறைவு - நினைவு கூறும் வகையில் கிளிநொச்சியில் வரலாற்று கண்காட்சி!...