பொலிஸார் மீது வாள்வெட்டு: சந்தேக நபர்கள் இருவர் கைது!

கோப்பாய் பிரதேசத்தில் காவல்துறை உத்தியோகத்தர்கள் இருவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
20 மற்றும் 23 வயதுடைய சந்தேக நபர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படகின்றது.
இதேவேளை, சந்தேக நபர்களை இன்றைய தினம் கோப்பாய் நீதவான் நீதிமன்ற நீதவானிடம் முன்னிலைப்படுத்தவுள்ளதாக, காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் – கோப்பாயில், காவல்துறை அலுவலகர் மீது நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் பிரதான சந்தேக நபர், புலிகளின் முன்னாள் உறுப்பினர் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த தாக்குதலை வழிநடத்தியவர் புலிகளின் முன்னாள் உறுப்பினரும், ஆவா குழுவின் உறுப்பினரும் ஆவார் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக காவல்துறை மா அதிபர் குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன் இந்த சம்பவம் தொடர்பில் மேலும் 6 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.இந்நிலையில், இன்றைய தினம் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்
Related posts:
|
|