பொலிஸார் ஊடாக நடவடிக்கை – யாழ் அரச அதிபர் மகேசன் அறிவிப்பு!

Wednesday, June 17th, 2020

யாழ்ப்பாணத்தில் பொது இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அரசியல்வாதிகளின் பதாகைகள், கம்பரேலியா உள்ளிட்ட கிட்டங்களின் பாதைகளிலில் உள்ள அரசியல் வாதிகளின் படங்கள் அகற்றுவதற்கு பொலிஸார் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் வீதிகளில் வேட்பாளர்களின் பெயர்களை வரைவது தேர்தல் சட்டத்திற்கு விரோதமான செயற்பாடு.  இதனை மீறுபவர்கள் மீது தேர்தல் சட்டத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் 17.06.2020 அன்று  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் – நாட்டில் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டு தேர்தலுக்கான பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றன. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கத்தினை கருத்தில் கொண்டு செயற்படுமாறு தேர்தல் திணைக்களத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பதாகைகள் பொது இடங்களில் காணப்பட்டால் அவற்றை உடனடியாக அகற்றுமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் யாழ்ப்பாணத்தில் கம்பரேலியா திடடத்தின் போது நாட்டப்பட்ட பதாதைகளில் உள்ள அரசியல் வாதிகளின் படங்களை ஸ்டிக்கர் ஊடாக மறைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் பொதுமக்கள் பயன்படுத்தும் வீதிகளில் வேட்ப்பாளர்களின் பெயர்கள்,கட்சியின் சின்னம் ஆகியன வரையப்படுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இந்த செயற்பாடானது முற்றிலும் தேர்தல் சட்டத்திற்கு முரணான செயற்பாடாகும். எனவே அவ்வாறான செயலில் ஈடுபடுவார்கள் மீது தேர்தல் சடடத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Related posts:


அரச மருத்துவ அதிகாரிகளது வேலை நிறுத்தத்திற்கு முகம் கொடுக்க தயார் - அமைச்சர் ராஜித சேனாரத்ன!
பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்களின் தேவைப்பாடுகளுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியால் துவிச்சக்க...
வாக்களிக்க தகுதியானவர்கள் 2023 தேருநர் பதிவேட்டில் தமது பெயர் உள்ளதா என்று உறுதிபடுத்திக் கொள்ளுங்கள...