பொலிஸாரால் இரண்டரை கோடி பெறுமதியான் கஞ்சா மீட்பு!

Saturday, August 20th, 2016

வடமராட்சி கிழக்கு உடுத்துறை, மணற்காடு பகுதிகளில் மது வரி திணைக்களமும் பொலிஸாரும்  கடற்படையின் உதவியுடன்  130 கிலோ கேரள கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர்

இதன் பெறுமதி சுமார் 2 கோடியே 60 லட்சம் ரூபா என கணிப்பிடப்பட்டுள்ளது. கஞ்சாவை மொத்தமாக விநியோகிக்க தயாராக இருந்த  5 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்தியாவில் இருந்து யாழப்பாணத்திற்கு கஞ்சாவை கடத்தும் நோக்கில் கடலில் இந்திய படகில் இருந்து யாழ்ப்பாணத்ததைச் சேர்ந்த ஒருவரின் படகிற்கு கஞ்சாவை மாற்றியதாக சந்தேகிக்கப்படும்   படகினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

Related posts: