பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 6 மாதங்களுக்கு தலா 7500 ரூபா நிவாரணம் – அமைச்சர் ரமேஷ் பத்திரண அறிவிப்பு!

Sunday, July 3rd, 2022

நாட்டில் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள 32 இலட்சம் குடும்பங்களுக்கு நிவாரணங்களை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

அடுத்த மாதம்முதல் அதற்கான செயற் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதுடன் ஒரு குடும்பத்திற்கு 7,500 ரூபா வீதம் நிதி வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றின் மூலம் கிடைக்கும் உதவிகளை பயன்படுத்தி மேற்படி 32 இலட்சம் குடும்பங்களுக்கும் நிவாரணங்களை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை மேற்படி செயற்திட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் , குறித்த செயற்திட்டத்திற்காக 200 பில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் பிரதமரின் தலைமையில் இடம்பெற்றுள்ள வாழ்க்கைச் செலவு தொடர்பான குழு கூட்டத்திலும் அது தொடர்பில் கலந்துரையப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

பொருளாதார ரீதியில் பாரிய பாதிப்புகளை எதிர்நோக்கியிருக்கும் தெரிவு செய்யப்பட்ட 32 இலட்சம் குடும்பங்களுக்கே அந்த நிவாரணங்கள் வழங்கப்படும் என்றும் ஜூலை மாதம் முதல் எதிர்வரும் ஆறு மாதங்களுக்கு அதற்கான செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய ஒரு குடும்பத்திற்கு ஆகக் குறைந்தது 7,500 ரூபா வீதம் நிதியை பெற்றுக் கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உலக வங்கியானது 200 மில்லியன் டொலர் நிதியையும் ஆசிய அபிவிருத்தி வங்கி மேலும் 200 மில்லியன் டொலர்களையும் அரசாங்கத்திற்கு பெற்றுக் கொடுத்துள்ளதுடன் அந்த நிதியையும் பயன்படுத்தி மேற்படி நிவாரண செயற் திட்டம் முன்னெடுக்கப்பட்டவுள்ளது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: