பொருளாதாரம் தொடர்பில் அரசியல்வாதிகளால் தீர்மானங்களை எடுக்க முடியாது – அதிகாரிகளது தவறான அறிவுறுத்தல்களே நெருக்கடிக்கு காரணம் – நாமல் ராஜபக்ச தெரிவிப்பு!

Saturday, May 7th, 2022

பொருளாதாரம் தொடர்பில் அரசியல்வாதிகளால் தீர்மானங்களை எடுக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகமான  பிபிசியிக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளர்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர் –

போதிய வருமானம் இன்றி வரிச்சலுகை வழங்கும் அரசின் முடிவு சரியல்ல என்றும் அவர் கூறினார்.

உள்ளூர் வர்த்தக நிறுவனங்கள் பொருளாதாரத்தில் பணத்தை மீள முதலீடு செய்யும் என்ற நம்பிக்கையில் ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், ஜனாதிபதி நம்பியவாறு அது நடக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்போது சர்வதேச நாணய நிதியத்திற்குச் சென்று ரூபாயை மிதக்குமாறு பொருளாதார நிபுணர்கள் வழங்கிய ஆலோசனையை அரசாங்கம் ஏன் பின்பற்றவில்லை என ஊடகவியலாளர் நாமல் ராஜபக்சவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்குப் பதிலளித்த அவர், அதற்கு முடிவெடுப்பவர்களும் பொறுப்பு என்று கூறினார். அரசியல்வாதிகள் பொருளாதாரம் தொடர்பான தீர்மானங்களை எடுக்க முடியாத நிலையே இதற்கு காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

அதிகாரிகள் தவறான அறிவுறுத்தல்களை வழங்கியதை தற்போதைய நிதியமைச்சர் அலி சப்ரியும் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: