பொதுமன்னிப்புக் காலம் மீண்டும் பிரகடனம்!

அனுமதியற்ற துப்பாக்கிகளை அரசாங்கத்திடம் ஒப்படைப்பதற்காக மீண்டும் பொதுமன்னிப்புக் காலத்தை பாதுகாப்பு அமைச்சு பிரகடனப்படுத்தியுள்ளது.
இதன் பிரகாரம் மே மாதம் 30 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 17 ஆம் திகதி வரை மீண்டும் பொதுமன்னிப்புக் காலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சின் ஊடக மையம் தெரிவித்துள்ளது.
பொது மக்களிடமிருந்து கிடைத்துள்ள கோரிக்கைகளை கவனத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. பொதுமன்னிப்புக் காலப் பகுதிக்குள், அனுமதியற்ற துப்பாக்கிகளை அருகிலுள்ள பொலிஸ் நிலையம், பிரதேச செயலகம் அல்லது மாவட்ட செயலகத்தில் ஒப்படைக்க முடியும் என்றும் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
விரைவில் மாகாணசபை தேர்தல் - ஆளும் தரப்பு கட்சிகளின் தலைவர்களுடன் அவசர சந்திப்புக்கு ஜனாதிபதி ஏற்பாடு...
நாடாளுமன்றத்தில் பைத்தியக்காரர்கள்போல் நடந்துகொள்ள வேண்டாம் - சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன வலிய...
|
|