பேலியகொடை மெனிங் சந்தை எதிர்வரும் 20 ஆம் திகதி ஆரம்பம் – நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவிப்பு!

Sunday, November 15th, 2020

பேலியகொடை புதிய மெனிங் சந்தையின் நடவடிக்கைகள் எதிர்வரும் 20 ஆம் திகதிமுதல் ஆரம்பமாகவுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் தலைமையில் புதிய மெனிங் சந்தையின் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

அத்துடன் அன்றையதினம் சந்தையின் அனைத்து பிரிவுகளிலும் குறிப்பிட்டளவு வர்த்தகர்களை மாத்திரம் உள்வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் என் கே ரணவீர குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சுகாதார பிரிவினரின் பரிந்துரைக்கமைய, ஏனைய வர்த்தகர்களை சந்தைக்குள் அனுமதிப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மெனிங் சந்தையை அண்மித்து சுமார் 100 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, புறக்கோட்டையில் அமைந்துள்ள மெனிங் சந்தை தொகுதியை பேலியகொடை பகுதிக்கு மாற்றுவதற்கு அரசு தீர்மானித்தது

Related posts: