பேராசிரியர் ஜி.எச். பீரிஸ் பேராதனை பல்கலைக்கழகத்தின் வேந்தராக தலைவர் கோட்டாபய ராஜபக்சவினால் நியமனம்!

Saturday, May 7th, 2022

பேராசிரியர் ஜி.எச். பீரிஸ் பேராதனை பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்றையதினம் (06) அரச தலைவர் மாளிகையில் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவிடமிருந்து தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.

திரு. ஜி.எச். பீரிஸ் 1960 இல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் முதல் தரப் பட்டத்துடன் புவியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார் மேலும் 1965 இல் UK கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தனது முனைவர் பட்டத்தைப் பொருளாதார புவியியல் துறையில் பெற்றார்.

இவர் முதலில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராக நியமிக்கப்பட்டு 44 வருடங்களாக பல்கலைக்கழக விரிவுரையாளராக கடமையாற்றியுள்ளார்.

பேராசிரியர் ஜி.எச். பீரிஸ் உலகின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் தொடர்பாக அதிக ஆய்வுகளை மேற்கொண்ட நிபுணர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


இலங்கையை சர்வதேச சதிக்குள் சிக்க வைக்க எதிர்க்கட்சிகள் முயற்சி - நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட்...
ஜி.எஸ்.பி ப்ளஸ் சலுகையை வழங்குவது குறித்து ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுடன் நீதியமைச்சர் கலந்துரையாட...
பொருளாதார நெருக்கடிகளை குறைந்தது இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு தாங்க வேண்டியிருக்கும் - நிதியமைச்சர் அ...