புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ்.புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலய மாணவர்கள் வரலாற்று சாதனை!

Monday, November 16th, 2020

யாழ்ப்பாணம் புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலய வரலாற்றில் அதிகமான மாணவர்கள், 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்றுள்ளனர்.

இதனடிப்படையில் புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்தில் இம்முறை 228 மாணவர்கள் புலமைப்பரிசீல் பரீட்சைக்கு தோற்றியுள்ளனர். அந்த மாணவர்களில் 159 மாணவர்கள் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் வெட்டுப்புள்ளி 160 புள்ளிகள் என்ற நிலையைத் தாண்டிய பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர்.

பாடசாலையின் கடந்த கால சித்திகளுடன் ஒப்பிடும் போது இம்முறை வரலாற்றில் அதி உயர் சித்தியாக 70 வீதம் பதிவாகியுள்ளது.

நல்லூர் செட்டித்தெருவில் வசிக்கும் அஞ்ஜிதன் அஜினி எனும் மாணவி 2020 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 195 புள்ளிகளைப் பெற்று குறித்த பாடசாலையில் அதி கூடிய புள்ளிகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி மாணவி சுபாஸ்கரன் ஜனுஸ்கா 2020ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 198 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.

இம்முறை யாழ்ப்பாணம் மாவட்டத்தின் வெட்டுப்புள்ளி 160 ஆக தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மகாஜனக் கல்லூரியில் இம்முறை 38 மாணவர்கள் 160 வெட்டுப்புள்ளி என்ற நிலையைத் தாண்டி பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர். தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் இம்முறை மாவட்ட மற்றும் தேசிய தர நிலைகள் பரீட்சைகள் திணைக்களத்தால் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Related posts: