புத்தாண்டு காலப்பகுதியில் மேற்கொள்ளும் பயணங்கள் தொடர்பாக பொலிஸ் பேச்சாளரின் விசேட அறிவிப்பு!

Monday, March 28th, 2022

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் தமது பயணங்கள் தொடர்பான விபரங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிடுவதை தவிர்க்குமாறு பொலிசார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அந்த தகவல்களை குற்றவாளிகள் தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளக்கூடும் என சிரேஷ்ட பொலிஸ் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

புத்தாண்டுக்கு முன்னரோ அல்லது புத்தாண்டின் போதோ பயணங்களை மேற்கொள்ளும் சந்தர்ப்பங்களில் அது தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை தவிர்க்கவும்.

அவ்வாறு பதிவிடுவதால் சமூக வலைத்தளங்களில், நட்பு பட்டியலில் உள்ள சிலரால் குறித்த தரவுகள் பெறப்பட்டு தங்களது வீட்டில் கொள்ளையிடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

எனவே, அவ்வாறான பதிவுகளை தவிர்ப்பது நல்லது என சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.

Related posts: