புதிய பாதுகாப்பு செயலாளராக கபில வைத்தியரத்ன?

இலங்கையின் புதிய பாதுகாப்பு செயலாளராக ஜனாதிபதி கொன்சூலர் கபில வைத்தியரத்ன நியமிக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சட்டமா அதிபர் திணைக்களத்தில் சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாக செயற்படும், கபில வைத்தியரத்ன, அந்தப் பதவியில் இருந்து ஒய்வுபெறவுள்ளார்.
சட்டமா அதிபராக கடந்த ஆண்டு கபில வைத்தியரத்ன பரிந்துரைக்கப்பட்ட போதிலும் 2014 ஆம் ஆண்டு பிஜியின் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக செயற்பட்ட காரணத்தால் அவர் அந்த பதவியை பெறமுடியாமல் போயிருந்தது.
முன்னைய யூகொஸ்லாவியாவின் ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற வழக்குகளில் பிரதான சட்டத்தரணியாகவும் அவர் செயற்பட்டிருந்தார்.
கபில வைத்தியரத்னவின் தந்தையான நோர்மன் வைத்தியரத்ன, ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினராகவும் ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தின் பிரதி சபாநாயகராகவும் செயற்பட்டிருந்தார்.
சிங்கப்பூரில் இருதய சத்திரசிகிச்சை மேற்கொண்ட பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டி ஆராய்ச்சி நாடு திரும்பியுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது
Related posts:
|
|