புதிய தவணைக்காக மத்திய வங்கியின் ஆளுநராக மீண்டும் நந்தலால் வீரசிங்க நியமனம்!

Thursday, June 30th, 2022

மத்திய வங்கியின் ஆளுனர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தனது பதவிக்காலத்தை நீடிப்பதற்கான கடிதத்தை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவிடமிருந்து பெற்றுள்ளார்.

இதன்படி அடுத்த ஆறு வருடங்களுக்கு கலாநிதி நந்தலால் வீரசிங்க மத்திய வங்கியின் ஆளுநராக இருப்பார்.

மத்திய வங்கி ஆளுநரின் பதவிக்காலத்தை நீடிப்பதற்கான கடிதம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் முதலில் அங்கீகரிக்கப்படாத போதிலும், பின்னர் அதற்கு அனுமதி வழங்க பிரதமர் நடவடிக்கை எடுத்துள்ளார்இ

இதேவேளை, முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் செயலாளராக ஜெனரல் தயா ரத்நாயக்கவும் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: