புதிய அமைச்சரவை ஒன்றே உருவாக்கப்படுமே தவிர, தற்போது இருக்கின்ற அமைச்சரவை மாற்றி அமைக்கப்படாது

Thursday, April 12th, 2018

புதிய அமைச்சரவை ஒன்றே உருவாக்கப்படுமே தவிர, தற்போது இருக்கின்ற அமைச்சரவை மாற்றி அமைக்கப்படாது என அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில்இதனைத் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், சிறிலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்களது எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில், கட்சியின் மத்திய செயற்குழு இன்று தீர்மானிக்கவுள்ளது. இந்த தீர்மானம் தங்களுக்கு தெரியப்படுத்தப்பட்டதன் பின்னர், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதன்படி எதிர்வரும் 14ம் திகதிக்கு முன்னர் புதிய அமைச்சரவை உருவாக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தற்போது சிறிலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: