புதிதாக பரவிவரும் பிரித்தானிய வைரஸே இலங்கையில் கொரோனா உயிரிழப்புகள் அதிகரிப்புக்கு காரணம் – இராணுவத் தளபதி தெரிவிப்பு!

Friday, April 30th, 2021

புதிதாக பரவிவரும் பிரித்தானிய வைரஸ் காரணமாகவே இலங்கையில் கொரோனா வைரஸ்; உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன என தெரிவித்துள்ள இராணுவதளபதி சவேந்திரசில்வா முன்னரை போல இல்லாமல் தற்போது நோய் தொற்றிற்கு ஆளாகி பத்து முதல் 14 நாட்களிற்குள் பொதுமக்கள் கடும் பாதிப்பை வெளிப்படுத்துகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் முன்னைய கொரோனா வைரஸ்களிடமிருந்து மாறுபட்ட விதத்தில் தற்போதைய வைரஸ் செயற்படுகின்றது என தெரிவித்துள்ள அவர் அதிகளவானவர்கள் தொற்றிற்கு உள்ளாகின்றனர். இதன் காரணமாக உயிரிழப்புகளும் அதிகரிக்கி;ன்றன எனவும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்கள் பத்துமுதல் 14 வது நாளில் குணமடைய தொடங்கினார்கள் என தெரிவித்துள்ள அவர் இதன் காரணமாக உயிரிழப்புகள் குறைவாக காணப்பட்டன.

ஆனால் புதிய வைரஸ் வேறுவிதத்தில் செயற்படுவதால் நாளாந்தம் ஆயிரம் நோயாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். அதற்கு சமாந்திரமாக உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: