புதிதாக சமுர்த்தி உதவி வழங்க நடவடிக்கை!
Saturday, May 12th, 2018
குறைந்த வருமானத்தைக் கொண்ட பதினான்கு இலட்சம் குடும்பங்களுக்கு சமுர்த்தி நிவாரணத்தைப் பெற்றுக்கொடுக்கக் கூடிய புதிய நடைமுறையொன்றை அறிமுகப்படுத்தஅரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இதற்கமைய இரண்டு தசாப்தங்களுக்கு கூடுதலான காலமாக சமுர்த்தி உதவி பெறத் தகைமையுடைய 3 இலட்சத்து 80 ஆயிரம் குடும்பங்களுக்கு சமுர்த்தி நிவாரணத்தைபெற்றுக்கொடுக்கக் கூடிய விதத்தில் உரிய நடைமுறைகளை வகுக்க அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
இதனிடையே சமுர்த்திச் செயற்பாடுகளில் கடந்த காலத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பாக சுட்டிக்காட்டி சமுர்த்தி உதவித் திட்டத்தை மறு சீரமைக்க நடவடிக்கைஎடுக்கப்படுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
நிறைவேற்று அதிகாரங்கள் ஜனாதிபதியிடமே இருக்க வேண்டும் - அமைச்சர் திசாநாயக்க
மரண தண்டனை பட்டியலில் முதலாவதாக இருப்பது பெண் ?
மெல்போர்னில் தரையிறங்கிய ஸ்ரீலங்கா ஏயர்லைன்ஸ்!
|
|