புகையிலை உற்பத்திகளுக்கு தடை!

Wednesday, July 19th, 2017

உடனடியாக அமலுக்கு வரும் வகையில் புகையிலை ஊடாக தயாரிக்கப்படும் புகையற்ற புகையிலை உற்பத்திகள் இன்றுமுதல் தடை செய்யப்பட்டுள்ளதாக தேசிய புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான அதிகாரசபை தலைவர் பாலித அபயகோண் தெரிவித்துள்ளார்

புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான அதிகாரசபையின் சட்டத்திற்கு அமைவாக இது தடை செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இதன்படி மாவா, பாபுல், பீடி, ஹான்ஸ், பான்பராக் மற்றும் குட்கா போன்ற புகையிலை ஊடான உற்பத்தி பொருட்களுடன், புகையிலையுடன் கூடிய வெற்றிலை உற்பத்தி மற்றும் விற்பனையும் தடை செய்யப்பட்டுள்ளது.இதனுடன் இனிப்பு சுவை ஏற்படுத்தக் கூடிய அல்லது நிறம் ஏற்படுத்த கூடிய புகையிலையுடன் கூடிய சிகரட் உற்பத்தி, விற்பனை, இறக்குமதி காட்சிப்படுத்தல் இந்த உத்தரவுக்கு அமைய தடை செய்யப்பட்டுள்ளது

Related posts: