பிரித்தானியாவை பூர்விகமாகக் கொண்ட மூன்று விஞ்ஞானிகளுக்கு இயற்பியல் நோபல் பரிசு!

Wednesday, October 5th, 2016

பிரித்தானியாவை பூர்விகமாகக் கொண்ட மூன்று விஞ்ஞானிகள், இந்த ஆண்டிற்கான, இயல்பியலுக்கான நோபல் பரிசை கூட்டாக வென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் டேவிட் தௌலெ, டங்கன் ஹால்டேன், மற்றும் மைக்கேல் காஸ்ட்ர்லிட்ஸ் ஆகியோர் பணி புரிகின்றனர். ”பொருட்களின் பண்புகள்” குறித்த புரிதலுக்கு , இவ்விஞ்ஞானிகள் செய்த பங்களிப்பிற்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது என்று நோபல் பரிசு குழு கூறியது.

வடிவயியல் தன்மைகளின் பல்வேறு கட்ட மாற்றங்கள் (topological phase transitions) குறித்த நுட்பமான நிகழ்வுகள் குறித்த ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பு அங்கீகரிக்கப்பட்டது என்று நோபல் பரிசு நடுவர் குழு கூறியது.

_91513210_nobleprize

Related posts: