பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ச இராஜினாமா என்ற செய்தி வதந்தியே – நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்ப அபயவர்த்தன!

பிரதமர் பதிவியிலிருந்து மஹிந்த ராஜபக்ச இராஜினாமா செய்துள்ளார் என வெளியாகியுள்ள செய்திகள் உண்மையற்ற ஒரு வதந்தி என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்ப அபவயர்த்தன தெரிவித்ததுள்ளார்.
அமைச்சரவை மீதான இடைக்கால தடையை எதிர்த்து நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தரப்பு தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின் தீர்ப்பு இன்று வெளியானது. இதில் குறித்த அமைச்சரவைக்கு தொடர்ந்தம் தடை உத்தரவை உச்சநிதிமன்றம் வழங்கியிருந்தது.
இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மகிந்த ராஜபக்ஸ ஆகியோர் தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் கூட்டமொன்று இன்று நடைபெற்றது. இந்நிலையிலேயே பிரதமர் பதிவியிலிருந்து மஹிந்த ராஜபக்ச இராஜினாமா செய்துள்ளார் என வதந்திகள் வெளியாகியிருந்தன.
இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்ப அபயவர்த்தன மேலும் குறிப்பிடுகையில் நாளையதினம் (15) மஹிந்த ராஜபக்ச நாட்டு மக்களுக்கு விஷேட உரையாற்றவுள்ளார் என்றும் அதன் பின்னரே தனது பிரதமர் பதவி குறித்து அவர் இறுதி முடிவு எடுப்பார் என்றும் மேலும் தெரிவித்தார்.
Related posts:
|
|