பிச்சைக்காரருக்கு கொரோனா – அனுராதபுரத்தில் 81 பிச்சைக்காரர்கள் தனிமைப்படுத்தலில்!

அனுராதபுரத்தில் பிச்சைக்காரர் ஒருவருக்கு கொரோனா தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, நகரத்தில் உள்ள ஏனைய பிச்சைக்காரர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தலுக்கு அனுப்புமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பி.சி.ஆர். சோதனையின் போது கொரோனா உறுதிப்படுத்தப்பட்ட பிச்சைக்காரர் நேற்று அனுராதபுரத்தில் உள்ள புனித நகரத்திற்கு அருகில் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து நகரத்திலும் அதைச் சுற்றியுள்ள 81 பிச்சைக்காரர்களைச் சுற்றிவளைத்த நகராட்சி அதிகாரிகள் அவர்களைத் தனிமைப்படுத்த உடனடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பின்னர் அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
வாக்குகள் எண்ணும் நிலையங்களில் மின்விநியோகத்தை உறுதிப்படுத்தவும்!
நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்களுக்கிடையிலான விசேட கூட்டம் அடுத்த வாரம்!
இரணைமடு குளத்தின் 4 வான்கதவுகள் திறப்பு!
|
|