பால்மாவின் விலை அதிகரிக்காது – நிதியமைச்சர் மீண்டும்தெரிவிப்பு!

Saturday, November 5th, 2016

பால்மாவின் விலையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க இதுகுறித்து மேலும் தெரிவிக்கையில் இறக்குமதி செய்யப்பட்ட பால்மா பைக்கெட் ஒன்றுக்கு வற் வரி விதிக்கப்பட்டுள்ளது இதனால் அதன் விலை அதிகரிக்கப்பட மாட்டாது.

தற்போது பால்மா பலவற்றுக்கான ஆகக்கூடிய சில்லறை கட்டுப்பாட்டு விலை விதிக்கப்பட்டுள்ளது.இறக்குமதி நிறுவனங்களுக்கு அனுமதியின்றி அவற்றின் விலைகளை அதிகரிக்க முடியாது . இந்த வற் வரியின் அடிப்படையில் பால்மாவின் விலையை அதிகரிப்பதற்கோ, அல்லது அந்த வரியை விலக்கிக் கொள்வது தொடர்பில் நிதியமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. இவர்கள் முன்வைத்த விடயங்களைக் கண்டறிந்து உண்மை நிலை உறுதியை செய்வதற்கு அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

0ff80c1bc3feb004bf6f84b891f4ec70_XL

Related posts: