பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான திரிபோஷாவை இந்த வாரத்திற்குள் வழங்குவதற்கு ஏற்பாடு!
Thursday, August 4th, 2022பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தேவையான திரிபோஷாவை சுகாதார மற்றும் வைத்திய அதிகாரிகளின் அலுவலகங்கள் ஊடாக இந்த வாரத்திற்குள் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை திரிபோஷா நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாலூட்டும் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்குத் தேவையான சுமார் 720,000 திரிபோஷா பொதிகளை தற்போது தயாரித்துள்ளதாக அதன் தலைவர் தீப்தி குலரத்ன தெரிவித்துள்ளார். அத்துடன், எதிர்வரும் சில வாரங்களில் குழந்தைகளுக்கு தேவையான திரிபோஷாவை உற்பத்தி செய்ய முடியும் என்று நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
எரிபொருளின் விலை வீழ்ச்சி அரசுக்கு ரூ 600 மில். மீதம் - கூட்டு எதிர்க்கட்சி எம். பி. பந்துல குணவர்தன...
இலங்கைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கவுள்ளது அமெரிக்கா!
உள்நாட்டு உற்பத்திகளை மேம்படுத்தி நாட்டின் பொருளாதாரம் வலுப்படுத்தப்படும் - அமைச்சர் மஹிந்தானந்த அல...
|
|