பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான முதலாவது சர்வதேச மாநாடு!

Monday, September 17th, 2018

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான முதலாவது உலக மாநாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று(17) ஆரம்பமாகிறது.

குறித்த இந்த மாநாடு கொழும்பு ஹில்டன் ஹோட்டலில், எதிர்வரும் 19ம் திகதி வரை இடம்பெறும் என தெரிவிக்கப்படுகிறது.

74 நாடுகளைச் சேர்ந்த 101 பாராளுமன்ற உறுப்பினர்களும், சிவில் சமூக செயற்பாட்டாளர்களும், அபிவிருத்தி செயற்பாடுகளின் பங்காளிகளும். இதில் பங்கேற்க உள்ளனர்.

இலங்கையின் தேசிய மதிப்பீட்டுக் கொள்கை இந்த மாநாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும், இது நாட்டின் மதிப்பீட்டு தொடர்பான வரலாற்றில் முக்கியமான திருப்புமுனையாக இருக்குமென பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

Related posts: