பாரத தேசம் கொரோனாவின் பிடியிலிருந்து விரைவில் மீண்டுவர வேண்டும் – யாழ். நாக விகாரையில் விசேட வழிபாடு!

Wednesday, May 5th, 2021

கொரோனா அச்சுறுத்தலிலிரந்து பாரத தேசம் விரைவில் மீண்டுவர வேண்டும் என யாழ். நாக விகாரையில் விசேட பூசை வழிபாடு நடைபெற்றுள்ளது.

சர்வதேச இந்து – பௌத்த ஒற்றுமைக்கான அமைப்பின் ஏற்பாட்டில் இன்றையதினம் கறித்த வழிபாடு இடம்பெற்றது. இதன்போது, ரத்ன சூத்திர பாராயணமும் ஐம்பெரும் கடவுளுக்கு பூசையும் நடைபெற்றுள்ளது.

இதன்போது உலகத்திற்கு தர்மத்தையும் அன்பையும் அகிம்சையையும் போதித்த பாரத தேசம் தற்போது எதிர்கொண்டுள்ள கொரோனா நெருக்கடியிலிருந்து மீட்சி பெறுவதற்கு இலங்கை அரசாங்கம் மற்று்ம மக்கள் சார்பான இந்து மத குருக்கள் தலைமையில் குறித்த பூசை இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வில், இந்திய துணைத்தூதுவர் எஸ்.பாலச்சந்திரன், இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் மற்றும் இந்து பௌத்த மத குருமார் ஆகியோர் கலந்துகொண்டுடிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

குடும்பத் தகராறு காரணமாகப் பூச்சி மருந்து குடித்த குடும்பப் பெண் மூன்று நாட்களின் பின் மரணம்!
முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத்தரப்படும் – ஈ.பி.டி.பியி...
99 சதவீத இடங்கள் வர்த்தக உரிமம் பெறவில்லை - தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பணிப்பாளர் அதிர்...