பாதுகாப்பை உறுதிப்படுத்தியதன் பின்னர் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம் – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு!

Saturday, May 11th, 2019

பல்கலைக்கழகங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியதன் பின்னரே பல்கலைக்கழக நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழகங்களின் பாதுகாப்பு குறித்து பல்கலைகழக உபவேந்தர்கள் திருப்தியுற்றதன் பின் எதிர்வரும் மே 13 ஆம் திகதிக்கு பின் மீண்டும் பல்கலைக்கழக நடவடிக்கைகளை வழமை போல் ஆரம்பிக்கலாம் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் பேராசிரியர் மொஹான் த சில்வா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் தினம் மற்றும் அதன் அமைப்பு தொடர்பில் தீர்மானிப்பதற்கு  துணை வேந்தருக்கு  அதிகாரம் உள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts: