பாதுகாப்பு வழங்கும் விடயம் தொடர்பில் உத்தரவிட நீதிமன்றுக்கு அதிகாரமில்லை!

Saturday, October 1st, 2016

எந்தவொரு நபருக்கும் பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவிட நீதிமன்றுக்கு அதிகாரமில்லை என கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் சட்டத்தரணி உபுல் ஜயசூரிய, சட்டத்தரணிகள் சங்கத் தலைவராக கடமையாற்றிய காலத்தில் தாக்கல் செய்த மனுவொன்று தொடர்பிலான விசாரணையின் போது, ஜனாதிபதி சட்டத்தரணி ஹேமந்த வர்ணகுலசூரிய முன்வைத்த வாதங்களை கருத்திற் கொண்டதன் பின்னர் நீதவான் இதனைத் தெரிவித்துள்ளார்.

தமக்கு உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதாகவும் சிலர் தம்மை பின்தொடர்வதாகவும் தெரிவித்து உபுல் ஜயசூரிய தமக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரி நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

எனினும், எவருக்கும் பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவிட முடியாது என நீதவான் தெரிவித்துள்ளார். இந்த மனு எதிர்வரும் ஜனவரி மாதம் 13ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

high-court

Related posts: