பாதுகாப்பு நடவடிக்கைக்காக 20,000 படையினர் கடமையில்!

Thursday, May 2nd, 2019

நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 20,000 படையினரை சேவையில் அமர்த்துவதற்குத் தீர்மானித்துள்ளதாக, சிவில் பாதுகாப்புத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

பாடசாலைகள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட பொது இடங்களின் பாதுகாப்பிற்காக அவர்களை ஈடுபடுத்தவுள்ளதாகவும் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தினூடாக 35,000 படையினர் பயிற்சிகளை பெற்று வருகின்றனர். இவர்களில் 4,000 பேர் கொழும்பு நகரை அண்மித்த பகுதிகளில் கடமைகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: