பாதுகாப்பான புதிய வகை சிலிண்டர்கள் இன்றுமுதல் சந்தையில் – துறைசார் நிறுவனங்கள் நடவடிக்கை!

Monday, December 6th, 2021

இலங்கையில் பலத்த சர்ச்சைகளின் பின்னர் மீண்டும் சமையல் எரிவாயுவை சந்தைக்கு விநியோகிக்க துறைசார் நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.

நுகர்வோர் விவகார அதிகாரசபையின் வழிகாட்டல்களுக்கமைய, சமையல் எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்க லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.

தற்போது சந்தைக்கு விடப்பட்டுள்ள எரிவாயு கொள்கலன்களில் வெள்ளை பின்னணியில் சிவப்பு நிறத்திலான லிட்ரோ நிறுவனத்தின் இலட்சினை கொண்ட பொலித்தின் சீல் வைக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று புதிய லாஃப்ஸ் எரிவாயு கொல்கலன்களில் மஞ்சள் நிறப்பின்னணியில், நீல நிற இலட்சினை கொண்ட பொலித்தீன் சீல் வைக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

அண்மைக்காலமாக நாடு தழுவிய ரீதியில் சமையல் எரிவாயு கொள்கலன்கள் வெடிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வந்த நிலையில், அதற்கான சந்தை விநியோகம் தற்காலிகமாக தடை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: