பாதுகாப்பற்ற புகையிரத போக்குவரத்து கடவை பணியாளர்கள் பணி பகிஷ்கரிப்பு!

Monday, October 31st, 2016

தமது வேதனத்தை ரூ.14,000 அதிகரிக்குமாறு கோரி பாதுகாப்பற்ற புகையிரத போக்குவரத்து கடவை பணியாளர்கள் நேற்று(30) நள்ளிரவு முதல் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கு முன்னதாக அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உறுதி மொழிக்கு அமைய வேதனம் ரூ.5,000 அதிகரிக்கப்படவில்லை என பாதுகாப்பு கடவை பணியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜே.ஏ.சீ பிரேமலால் தெரிவித்துள்ளார். பாதுகாப்பற்ற கடவைகளில் பணி புரிபவர்களை காவல்துறை திணைக்களமே நியமித்துள்ளது.

இந்நிலையில், போக்குவரத்து சபையினால் பாதுகாப்பற்ற கடவை பணியாளர்களுக்கு வேதன அதிகரிப்பை பெற்றுக் கொள்ள முடியாதென போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் ஜே ஏ சி பிரேமலால் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் இன்றைய தினத்தில் 687 பாதுகாப்பற்ற கடவைகளில் சேவையில் ஈடுபடுதை பணியாளர்கள் தவிர்த்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

railway-gate

Related posts: