பாதீட்டில் உணவுக்கு உணவுக்கான நிவாரணம் கிடைக்கப்பெறும் – விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Monday, August 29th, 2022

சந்தையில் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில், இந்தமுறை பாதீட்டில் உணவுக்கான நிவாரணம் கிடைக்கப்பெறும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

வலஸ்முல்ல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டு மக்களுக்கு வாழ முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அரசாங்கத்தில் அங்கம் வகித்தவர்கள் என்ற ரீதியில் இந்த பாதிப்புக்கு தாமும் பொறுப்பேற்கின்றோம்.

இந்தநிலைமையில் இருந்து மீள்வதற்கான வாய்ப்புக்களை உருவாக்க வேண்டும். மக்களுக்கு உணவுக்கான நிவாரணம் வழங்க இந்த பாதீட்டில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தற்போது பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ள, கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் நிவாரணம் வழங்குவதற்கான யோசனையை ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


தேர்தல் சட்டங்களை மீறிய சம்பவங்களுக்கு எதிராக வழக்கு தொடர்பில் பெப்ரல் அமைப்பு கோரிக்கை!.
தனியார் பிரத்தியேக வகுப்புகளை ஆரம்பிப்பது தொடர்பில் வெள்ளிக்கிழமை இறுதித் தீர்மானம் - தொழில்முறை விர...
டிஜிட்டல் பொருளாதார முறை தெரிவு மாத்திரமல்ல அது அத்தியாவசியமான தேவை” ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலிய...