பாதிக்கப்பட்டுள்ள வியாபார நிறுவனங்கள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ளும் கால எல்லை நீடிப்பு!

கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வியாபார நிறுவனங்கள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ளும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய மே மாதம் 15 ஆம் திகதிவரை கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக தொழில் ஆணையாளர் நாயகம் ஏ.விமலவீர தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டுள்ள வியாபார நிறுவனங்கள் தொடர்பான தகவல்களை வழங்க சம்பந்தப்பட்டவர்கள் அதீத முனைப்பை காட்டி வருவதை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி தொழில் திணைக்களத்தின் இணைய முகவரியான www.labourdept.gov.lk க்குள் பிரவேசத்து இந்த செயற்பாட்டுடன் இணைந்துக்கொள்ள முடியும் என தொழில் ஆணையாளர் நாயகம் ஏ.விமலவீர மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மீசாலையில் கால்நடை மருத்துவர் அலுவலகம்!
இன்றுமுதல் தனியார் பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் விநியோகம்!
பெண் தொழில் முயற்சியாளர்களுக்கான சிறியளவிலான பல்பொருள் நிலையங்களின் வலையமைப்பை நிறுவ அமைச்சரவை அங்கி...
|
|