பாதகமான வர்த்தக ஒப்பந்தங்களை மீளாய்வு செய்ய வேண்டும் – ஜனாதிபதி தெரிவிப்பு!

Thursday, September 24th, 2020

கைச்சாத்திடப்பட்டுள்ள பல்வேறு வர்த்தக ஒப்பந்தங்கள் நாட்டிற்கு சாதகமற்றது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

நாட்டுக்கு நன்மை பயக்கும் அதிக இலாபமீட்டக்கூடிய விதத்தில் ஒப்பந்தங்கள் மீளாய்வு செய்யப்பட வேண்டும் என ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் மீளுருவாக்கத்தின் போது ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கு உத்தியோகபூர்வமாக தலைமைத்துவத்தை வழங்கியுள்ள ஏற்றுமதி அபிவிருத்தி சபை 28 வருடங்களின் பின்னர் கூடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதலீட்டாளர்களை அடையாளம் கண்டு, நிறுவன மற்றும் தனிநபர் மட்டங்களில் வடிவமைக்கப்பட்ட புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இதன்போது அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச முயற்சியாண்மை மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் குறித்து ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த விடயம் குறித்து கலந்துரையாப்பட்டுள்ளது.

பல்வேறு நிறுவனங்கள் முன்னெடுத்த ஆய்வுகளின் விளைவாக, உள்ளூர் மற்றும் சர்வதேச சந்தைகளை வெல்லக்கூடிய பல திட்டங்கள் கைவசமுள்ளதாக ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: