பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் தகவல்களை எழுத்து மூலம் அனுப்பி வைக்க வசதி!

Wednesday, May 29th, 2019

நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான தகவல்களை எழுத்துமூலம் அனுப்புமாறு கோரும் பத்திரிகை அறிவித்தல் வெளியிடப்படவுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் பற்றி எவருக்கும் தமது கருத்து மற்றும் யோசனைகளை எழுத்து மூலம் அனுப்புவதற்கான அறிவித்தல் பத்திரிகைகள் மூலம் விரைவில் வெளியிடப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஆஷூ மாரசிங்க தெரிவித்துள்ளார்.

14 நாட்களுக்குள் இவ்வாறான தகவல்களை அனுப்ப முடியும். இது தேசிய பாதுகாப்பு மற்றும் நாட்டின் பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியமானது எனவும் அவர் குறிப்பிட்டார்.

Related posts: