பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மற்றும் இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தை மீளப்பெறுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அரசாங்கத்திடம் வலியுறுத்து!

Sunday, September 24th, 2023

வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மற்றும் இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தை உடனடியாக மீளப்பெறுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அரசாங்கத்தை வலியுறுத்துகிறது.

சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு சட்டங்களும் மனித சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சியை கடுமையாக பாதிக்கிறது என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட துறைசார்ந்த தரப்பினருடன் எவ்வித ஆலோசனையும் இன்றி இந்த சட்டமூலங்கள் வரையப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

இதனடிப்படையில், சமூகத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் அர்த்தமுள்ள முறையான உரையாடல்களை மேற்கொள்வது முக்கியம் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: