பதவி வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை!

Wednesday, February 6th, 2019

வடக்கு மாகாண தமிழ் மொழி மூலப் பாடசாலைகளில் விஞ்ஞானத்துறையில் தகவல் தொழில்நுட்பப் பாடத்திற்கு நிலவும் இலங்கை ஆசிரியர் சேவையின் 3 ஆம் வகுப்பு – 1 (அ) தரப் பதவி வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்புச்  செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சையை எதிர்வரும் 16 ஆம் திகதி சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த பரீட்சைக்கு விண்ணப்பித்த தகைமையுடைய பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

எனவே 2019.02.12 ஆம் திகதிக்கு முன்னர் அனுமதி அட்டைகள் கிடைக்கப்பெறாத விண்ணப்பதாரிகள் செயலாளர், மாகாணப் பொதுச்சேவை ஆணைக்குழு, வடக்கு மாகாணம், இல: 393/48, கோவில் வீதி, நல்லூர், யாழ்ப்பாணம் என்னும் முகவரியுடனோ அல்லது 021 221 9939 என்னும் தொலைபேசி இலக்கத்துடனோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

பரீட்சார்த்திகளுக்குரிய அனுமதி அட்டைகள் இருந்தால் மட்டுமே பரீட்சைக்குத் தோற்றுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என வடமாகாணப் பொதுச்சேவை ஆணைக்குழு செயலாளர் அ.சிவபாலசுந்தரன் அறிவித்துள்ளார்.

Related posts: