பண்டத்தரிப்பு பெண்கள் பாடசாலை நிர்வாகத்துக்கு வீராங்கனைகளின் பெற்றோர் மூன்று நாள்கள் அவகாசம்

Thursday, February 22nd, 2018

பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலையின் கால்பந்தாட்ட அணி மீண்டும் களமிறங்குவது தொடர்பாக நாளைமறுதினம் முடிவு அறிவிக்கப்படும் என்று பாடசாலை நிர்வாகம் வீராங்கனைகளின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளது.

பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலை அணி யாழ்ப்பாணம் பாடசாலைகள் கால்பந்தாட்ட சங்கம் நடத்திய மாகாண மட்ட கால்பந்தாட்ட தொடரின் இறுதியாட்டத்தில் நேற்றுமுன்தினம் கலந்து கொள்ளவில்லை. இதனால் அதிருப்தி கொண்ட வீராங்கனைகளின் பெற்றோருக்கும் பாடசாலை நிர்வாகத்துக்கும் இடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றது.

இதில் தமது பிள்ளைகளின் அணியை இறுதியாட்டத்தில் பங்குபற்ற அனுமதிக்காமைக்குரிய காரணத்தை அறிவிக்குமாறு பாடசாலை நிர்வாகத்திடம் பெற்றோர் வினவினர். ஆனால் பாடசாலை நிர்வாகம் காரணம்கூற மறுத்தது. எனினும் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை வரை அவகாசம் தருமாறும் அதற்குள் சாதகமான முடிவுகள் அறிவிக்கப்படும் என நிர்வாகம் வாக்குறுதி அளித்துள்ளதாக பெற்றோர் தெரிவித்தனர். கால்பந்தாட்டப் பயிற்சி தொடர்பிலான ஏனைய பல விடயங்களையும் நிர்வாகத்திடம் பெற்றோர் தெரிவித்தனர் என்றும் அறியமுடிகிறது.

Related posts: