படகு கட்டும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் தொழில் திறனை மேம்படுத்த இலங்கை கடற்படை நடவடிக்கை!

Saturday, April 8th, 2023

இலங்கையில் படகு கட்டும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் தொழில் திறனை மேலும் மேம்படுத்த இலங்கை கடற்படை முன்வந்துள்ளது.

குறிப்பாக படகுகளை சர்வதேச தரத்தில் வடிவமைப்பதில் புதிய யுக்திகளையும் நவீன தொழில்நுட்பத்தையும் பயன்படுத்துவது தொடர்பில் சந்திப்பொன்றை கடற்படையினர் நடத்தியுள்ளனர்.

இந்த நிகழ்வு வெலிசரவில் உள்ள கடற்படையினரின் படகு கட்டும் வளாகத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்தத் திட்டத்தின் ஊடாக தொழில்சார் தரப்பினர் புதிய முறைமைகளை அறிவதற்கான வாய்ப்புக்கள் எட்டியுள்ளன.

மேலதிக ஆலோசனைகளையும் கடற்படை எதிர்காலத்தில் வழங்குவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2010ஆம் ஆண்டு முதல் கப்பல் கட்டும் பணிக்காக மென்பொருள் மற்றும் திறமையான மனித வளத்தை கடற்படையினர் பயன்படுத்துகின்றனர்.

கடற்படை தளபதியின் பணிப்புரைக்கு அமையவே இந்த நிகழ்வு கடற்படை பொறியியல் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


ஜனாதிபதி மக்களுக்கு நடைமுறை சாத்தியமற்ற விடயங்களை தெரிவித்திருக்கவில்லை - இராஜாங்க அமைச்சர் திலும் அ...
சரியான வழிகாட்டலை கற்பிக்கும் ஆசிரியர்களினாலேயே உலகின் எதிர்காலம் மறுசீரமைக்கப்படுகிறது – பிரதமர் மஹ...
ஸ்ரீலங்கன் விமான சேவை, 2024 ஆம் ஆண்டு செலுத்த வேண்டிய உத்தரவாதப் பத்திரத்திற்கான வட்டித் தொகையை செலு...