பசுபிக் கடலில் மூழ்கிய ஜப்பானிய கப்பல் அருகே இலங்கைக் கடற்படைக்க பயிற்சி!

Tuesday, April 19th, 2016

இரண்டாம் உலக யுத்தத்தில் பசுபிக் கடலில் மூழ்கிய ஜப்பானியக் கப்பல் அருகே இலங்கைக் கடற்படையின் ஒரு பிரிவினர் சுழியோடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இரண்டாம் உலக யுத்தத்தின் போது ஜப்பானியப் போர்க்கப்பலான டோகாய் மாரு கப்பல் அமெரிக்க தலைமையிலான நேசநாட்டுப் படையினரால் பசுபிக் கடற்பரப்பில் மூழ்கடிக்கப்பட்டது.குறித்த கப்பல் கடலுக்கடியில் புதைந்துள்ள பகுதியில் கண்காணிப்பு மற்றும் செயன்முறை சுழியோடும் பயிற்சியொன்றில் இலங்கைக் கடற்படைச் சிப்பாய்கள் பிரிவொன்று ஈடுபட்டுள்ளது.

ஜப்பான் குவாமி கடற்படை முகாமில் அமெரிக்க கடற்படையினருடன் இணைந்து சுழியோடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ள இலங்கைக் கடற்படைச்சிப்பாய்கள் பிரிவினரே இந்தப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts: