பகிடி வதையை தடுக்க வருகிறது புதிய வழி : உயர்கல்வி அமைச்சு அதிரடி!

Thursday, June 7th, 2018

பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதை சம்பவங்களால் சித்திரவதை மற்றும் துஸ்பிரயோகத்திற்கு உள்ளான சுமார் 280 சம்பவங்கள் பதிவாகியுள்ளாதாக உயர் கல்வி மற்றும் கலாசார அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகங்களினுள் பகிடிவதையை தடுக்கும் முகமாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஊடாக தொலைபேசி பயன்பாட்டை அறிமுகம் செய்யும் நிகழ்வு கொழும்பில் இடம்பெற்றது.

இதன் மூலம் எந்தவொரு பல்கலைக்கழக மாணவரும் பகிடிவதைக்கு முகம் கொடுக்க நேரிட்டால் அங்குள்ள விசேட பொத்தானை அழுத்தி குறுந்தகவல் ஒன்றை அனுப்ப முடியும்.

இந்த குறுந்தகவல் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் ஒழுக்காற்றுக்கு பொறுப்பான விரிவுரையாளருக்கும் தானியங்கி முறையில் செல்லும். அத்துடன் குறித்த மாணவன் உள்ள இடத்தையும் இந்த குறுந்தகவல் ஊடாக அறிந்து கொள்ள முடியும் என்பது விசேட அம்சமாகும்.

Related posts:


வடமாகாண ஆசிரியர்களின் இடமாற்றப் பட்டியல் வெளியீடு 221 பேருக்கு மாற்றம் 419 பேரின் விண்ணப்பம் நிராகரி...
மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது வீதி விபத்து மரணங்கள் – கவலை வெளியிட்ட பணிப்பாளர் சத்தியமூர்த்தி !
பெரும்போக நெல் அறுவடையின் போது, ஏற்பட்டுள்ள இழப்பீடு 10 முதல் 15 சதவீதம் வரை அதிகரிப்பு - விவசாய அமை...