நேர்முகப் பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளன: சுகாதார அமைச்சு!

Wednesday, October 31st, 2018

சுகாதார அமைச்சில் நடைபெறவிருந்த நேர்முகப் பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ன.

சுகாதார அமைச்சில் அடுத்த மாதம் 03, 04ஆம் திகதிகளில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்த, நேர்முகப் பரீட்சைகள் தவிர்க்க முடியாத காரணங்களால் பிற்போடப்படுவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இவ்வாறு நேர்முகப் பரீட்சைகள் பிற்போடப்படுவது தொடர்பான அறிக்கையானது, சுகாதார அமைச்சின் செய்தி மற்றும் விளம்பர பிரிவின் சிரேஸ்ட உதவி செயலாளர் வத்சலா பிரியதர்சினியின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts: