நெல் தொகையை பயன்படுத்தி சந்தைக்கு அரிசி விநியோகம் – விவசாய அமைச்சு தெரிவிப்பு!
Tuesday, June 28th, 2022நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் உள்ள நெல் தொகையை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்ட அரிசியை சந்தைக்கு விநியோகிக்கும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது..
உச்சபட்ச விலைக்கு அமைய அரிசி சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. அந்த அரிசி தொகையை சதொச வர்த்தக நிலையங்கள் ஊடாக விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை தொடருந்து கட்டணங்களை திருத்தி அமைக்க போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
பேருந்து கட்டணங்களில் 50 சதவீதத்திற்கு ஒப்பாக தொடருந்து கட்டணங்களை திருத்த யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது. அதற்கமைய எதிர்வரும் நாட்களில் தொடருந்து கட்டணம் சீரமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
00
Related posts:
சிறுவர்கள் பிச்சை எடுத்தால் கைது!
ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் இலங்கைக்கு விஜயம்!
யாழ்ப்பாண மாவட்ட செயலக நுழைவாயிலை முடக்கி கடற்றொழிலாளர்கள் போராடம்!
|
|