நெடுந்தீவுப் பகுதியில் கைது செய்யப்பட்ட ஒன்பது இந்திய மீனவர்களுக்கும் மே -3 வரை விளக்க மறியல் 

Wednesday, April 20th, 2016

நெடுந்தீவுக் கடற்பரப்பில்  கைது செய்யப்பட்ட ஒன்பது இந்திய மீனவர்களையும் எதிர்வரும் மே மாதம்-3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் எம்.எல். றியாழ் உத்தரவிட்டார்.

இன்று புதன்கிழமை (20-04-2016) நெடுந்தீவுப் பகுதியில் வைத்துக்  கடற்படையினரால்  கைது செய்யப்பட்ட மேற்குறித்த 9 மீனவர்களும் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே மேற்படி விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts: